தமிழக காவல் துறையினரை கண்டித்து மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டன.
சட்டமன்ற மானியக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று (ஜூலை 17) சட்டமன்றத்தை முற்றுகையிடுவதற்காக மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு திரண்டனர். எட்டுவழிச் சாலை உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு, “தமிழகம் முழுவதும் பல்வேறு திட்டங்களுக்கு எதிராக தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. போராடுபவர்கள் மீது தேச துரோகம், கொலை முயற்சி, அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் ஆயிரக்கணக்கான பொய் வழக்குகளை காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர். போராடும் மக்களை அச்சுறுத்தியும், மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் இயக்கங்களை ஒடுக்கியும் தமிழக அரசு அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை நடத்திவருகிறது” என்று குற்றம் சாட்டியவர்,
“தமிழகம் முழுவதும் எட்டுவழிச் சாலை, ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட் ஆகிய திட்டங்களுக்கு எதிராக பேசக் கூட அனுமதி இல்லை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தக்கூட அனுமதிக்காமல் ஒரு காட்டாட்சியை போலீஸ் நடத்திக் கொண்டிருக்கிறது” என்றும் தெரிவித்தார்.
“இது மக்கள் அதிகாரம் அமைப்பிற்கு மட்டும் விதிக்கப்பட்ட தடை உத்தரவு அல்ல. இரண்டு நாட்கள் முன் விழுப்புரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய சிபிஐ மூத்த தலைவர் நல்லகண்ணு கைது செய்யப்பட்டார்” என்று சுட்டிக்காட்டியவர், இதற்கெல்லாம் காவல் துறைக்கு யார் அதிகாரம் கொடுத்தது. மக்கள் பிரச்சினைகளை மக்களுக்கான இயக்கங்கள் பேசாமல் யார் பேசுவது? எனக் கேள்வி எழுப்பினார்.
“அரசியலமைப்பு சட்டத்தின்படி அனைவருக்கும் பேச்சுரிமையும், எழுத்துரிமையும் உள்ளது. அதனை ஏன் தடை செய்கிறீர்கள். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் ” என்றும் ராஜு குறிப்பிட்டார்.
பின்னர் சட்டமன்றத்தை முற்றுகையிட பேரணியாக சென்றவர்களை சேப்பாக்கத்தில் தடுத்து நிறுத்திய காவல் துறையினர், பெண்கள் உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட 600 பேரை கைது செய்து சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சமூக நலக் கூடத்தில் வைத்தனர்.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: சூர்யாவை தொலைபேசியில் மிரட்டிய அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/07/16/84)**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**
**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**
**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**
�,”