நயன்தாரா நடிப்பில் உருவான கொலையுதிர் காலம் திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
உன்னைப் போல் ஒருவன், பில்லா 2 ஆகிய படங்களை இயக்கியவர் சக்ரி டோலெட்டி. இவர் நயன்தாராவை வைத்து கொலையுதிர் காலம் என்ற தலைப்பில் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். இப்படத்தில் பிரதாப் போத்தன், பூமிகா, ரோகிணி உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எட்செட்டெரா எண்டெர்டய்ன்மெண்ட் நிறுவனத்தின் வி.மதியழகன் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தை கடந்த டிசம்பர் மாதமே வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். பின்னர் ஜனவரிக்கு படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் ஜனவரியிலும் ரிலீசாகவில்லை. பின்னர், ஜூன் 14ஆம் தேதியன்று இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்தது.
எழுத்தாளர் சுஜாதாவின் கொலையுதிர் காலம் நாவலின் தலைப்பு இப்படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. விடியும் முன் திரைப்படத்தின் இயக்குநர் பாலாஜி குமார் கொலையுதிர் காலம் நாவலுக்கான உரிமைகளை சுஜாதாவின் மனைவியிடம் இருந்து பெற்றுள்ளார். இதற்காக முன்பணமாக ரூ.5 லட்சம் கொடுத்துள்ளார். நாவலை தழுவி படம் உருவாக்கப்பட்ட பின் ரூ.5 லட்சம் வழங்குவதாக இருவருக்கும் இடையே ஒப்பந்தமாகியுள்ளது. இந்நிலையில், கொலையுதிர் காலம் என்ற தலைப்பில் எட்செட்டெரா எண்டெர்டய்ன்மெண்ட் நிறுவனம் திரைப்படத்திற்கான விளம்பரப் பணிகளை மேற்கொண்டது. கொலையுதிர் காலம் நாவலுக்கான உரிமைகளை தான் பெற்றுள்ளதாக பாலாஜி குமாரின் வழக்கறிஞர் தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியும் எந்த பதிலும் இல்லை.
இதைத்தொடர்ந்து, இப்படத்தை தற்போது வெளியிட அனுமதித்தால் தனக்கு ஆபத்து நேரும் என்று பாலாஜி குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், கொலையுதிர் காலம் என்ற தலைப்பில் இப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கொலையுதிர் காலம் திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்த நீதிபதி, இவ்விவகாரத்தில் ஜூன் 21ஆம் தேதிக்குள் விளக்கமளிக்கும்படி தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
**
மேலும் படிக்க
**
**
[அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/06/11/26)
**
**
[டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் மா.செ.க்கள்!](https://minnambalam.com/k/2019/06/10/66)
**
**
[கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி](https://minnambalam.com/k/2019/06/10/46)
**
**
[மோடிக்கு வானம் கொடுத்த பாகிஸ்தான்](https://minnambalam.com/k/2019/06/11/21)
**
**
[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)
**
�,”