wகிச்சன் கீர்த்தனா: பிரெட் வெஜிடபிள் கட்லெட்

public

உலகப் பிரசித்தி பெற்ற மற்றும் பழைமையான உணவு வகைகளில் ஒன்று பிரெட். பொதுவாக பிரெட் வெளிநாட்டவரால் நமது நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு உணவு வகை என்ற போதிலும், நமது அன்றாட உணவுப் பழக்கத்தில் இதுவும் ஒன்றாகிவிட்டது. இந்த பிரெட்டில் விதவிதமாகச் செய்து அசத்துகிறார்கள் நம்மவர்கள். அவற்றில் ஒன்று இந்த பிரெட் வெஜிடபிள் கட்லெட்.

**என்ன தேவை?**

பிரெட் ஸ்லைஸ் – 10

கேரட், உருளைக்கிழங்கு – தலா 2

குடமிளகாய் – 1

கொத்தமல்லி – சிறிதளவு

பச்சை மிளகாய் – 1

எண்ணெய் – கால் டீஸ்பூன்

நெய் – 6 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

**எப்படிச் செய்வது?**

உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து மசிக்கவும். பிரெட்டைப் பொடித்துக் கொள்ளவும். குடமிளகாயைப் பொடியாக நறுக்கவும். கேரட்டைத் துருவிக் கொள்ளவும். குடமிளகாயையும், கேரட்டையும் எண்ணெயில் லேசாக வதக்கவும். இதனுடன் உருளைக்கிழங்கு, பிரெட் தூள், நறுக்கிய கொத்தமல்லி, நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்துப் பிசைந்து, சிறு கட்லெட் வடிவத்தில் தட்டிக் கொள்ளவும். தோசைக்கல் (அ) நான் ஸ்டிக் தவாவில் போட்டு நெய் தடவி சுட்டெடுக்கவும்.

**குறிப்பு:** சில்லி சாஸ் இதற்கு சூப்பர் காம்பினேஷன்.

[நேற்றைய ரெசிப்பி: பிரெட் பக்கோடா](https://www.minnambalam.com/k/2019/10/16/87/kitchen-keerthana-bread-pakoda)�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0