wகிச்சன் கீர்த்தனா: கத்திரிக்காய் பாதாம் கறி

Published On:

| By Balaji

வாய்க்கு ருசியாகச் சமைக்கப்படும் உணவுகள் சில நேரங்களில் உடல் உபாதைகளுக்கும் வழிவகுக்கும். அதைத் தவிர்க்க சில டயட் உணவுகள் ரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவைக் குறைப்பதோடு, நம் உடலில் உள்ள வளர்சிதைமாற்ற அளவையும் உயர்த்தும். அப்படிப்பட்ட உணவே இந்தச் சுவையான கத்திரிக்காய் பாதாம் கறி.

**என்ன தேவை?**

கத்திரிக்காய் – 250 கிராம்

ஆலிவ் ஆயில் – 2 டீஸ்பூன்

வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்)

தக்காளி – 2 (நறுக்கவும்)

மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்

மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்

பாதாம் விழுது – அரை கப்

இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு.

**எப்படிச் செய்வது?**

வாணலியில் ஆலிவ் ஆயில் சேர்த்துச் சூடாக்கி, வெங்காயத்தைப் பொன்னிறமாக வறுக்கவும். பின்பு இஞ்சி – பூண்டு விழுது, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். அதில் மிளகுத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு பாதாம் விழுதைச் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். அதனுடன் சுத்தம் செய்து நறுக்கிய கத்திரிக்காயைச் சேர்த்து வேகவைக்கவும். எண்ணெய் பிரியும்போது கொத்தமல்லித்தழையைத் தூவி இறக்கவும். சுவையான கத்திரிக்காய் பாதாம் கறி தயார்.

[நேற்றைய ஸ்பெஷல்: சமையல் என்பது ஒரு கலை](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2020/02/09/1)

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share