a
விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் ‘96’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் விஜய் சேதுபதி முதல்முறையாக த்ரிஷாவுடன் இணைந்திருக்கும் திரைப்படம் `96′. இந்தப் படத்தை `பசங்க’ , `சுந்தரபாண்டியன்’, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி 18 வயது இளைஞனிலிருந்து 96 வயது முதியவராக மூன்று வேடங்களில் நடித்திருக்கிறார்.
படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று(ஜூலை 12) மாலை 5மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் காலையிலேயே வெளியிட்டுள்ளது. மேலும் படத்தின் டீஸர் மாலை 6மணிக்கு வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளனர். த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் [ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை](https://twitter.com/trishtrashers/status/1017245899951493120) பகிர்ந்து, “படத்தின் டீசரை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன், என்னால் காத்திருக்க முடியவில்லை” என பதிவிட்டுள்ளார்.
சண்முகசுந்தரம் ஒளிப்பதிவாளராகவும், கோவிந்த் மேனன் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துந்துள்ள இப்படத்தை மெட்ராஸ் எண்டர்டெய்ன்மென்ட்ஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரித்துள்ளார். படத்தொகுப்பை கோவிந்தராஜ் மேற்கொள்ள, உமா பாரதி, கார்த்திக் வேந்தா பாடல்கள் எழுதியுள்ளனர். கலை இயக்குநராக வினோத் ராஜ்குமார் பணியாற்றியுள்ளார்.�,