wகளத்திற்கு வெளியே நடக்கும் வார்த்தைப் போர்!

public

கிரிக்கெட்டில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் போது வீரர்கள் விமர்சிக்கப்படுவர்; சர்ச்சைக்குரிய வகையில் முடிவுகளை வழங்கும் போது நடுவர்கள் விமர்சிக்கப்படுவர்; தற்போது வர்ணனையாளர்கள் தொடர்ந்து விமர்சனங்களில் சிக்கிவருகின்றனர்.

கிரிக்கெட் போட்டிகளை தமிழில் வர்ணனை செய்யும், முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் வீரர்களை ஒருமையில் அழைப்பது சமூகவலைதளங்களில் விமர்சனத்துக்குள்ளானது.

தற்போது முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கரின் வர்ணனை விமர்சனத்துக்குள்ளாகிவருகிறது. ஏற்கெனவே மகேந்திர சிங் தோனியை கடுமையாக விமர்சித்து பேசிய மஞ்சுரேக்கர் சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டார். தற்போது ரவீந்திர ஜடேஜா பற்றிய அவரது பேச்சும் எதிர்ப்புகளைப் பெற்றுவருகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், இந்தியா தோல்வியடைந்த பிறகு, ஜடேஜாவை அணியில் கொண்டு வருவது பற்றி சஞ்சய் மஞ்சுரேக்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் பதில் அளித்த போது, ‘நான் துண்டு துணுக்கு வீரரின் பெரிய ஆதரவாளன் இல்லை. ரவீந்திர ஜடேஜா தன் கிரிக்கெட் வாழ்வில் 50 ஓவர் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அந்த நிலையில்தான் உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் முழுமையான பவுலர். 50 ஒவர் கிரிக்கெட்டில், ஒரு பேட்ஸ்மென் மற்றும் ஸ்பின்னர் வேண்டும்” என்று மஞ்சுரேக்கர் பதிலளித்தார்.

இதற்கு தனது ட்விட்டரில் பதிலளித்துள்ள ஜடேஜா, “நீங்கள் விளையாடியதை விட இருமடங்கு போட்டிகளில் நான் ஆடிவிட்டேன், இன்னும் ஆடிக்கொண்டிருக்கிறேன். சாதனை புரிந்தவர்களை முதலில் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் ‘வெர்பல் டயரியா’ போதும்! நிறுத்துங்கள்” என்று கூறியுள்ளார்.

**

மேலும் படிக்க

**

**[இங்கே வந்தால்… அங்கே இருந்தால்…: பட்டியல் போட்ட எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/04/22)**

**[திட்டமிட்டே திமுகவில் இணைந்தேன்: தங்க தமிழ்ச்செல்வன்](https://minnambalam.com/k/2019/07/01/53)**

**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு – திமுக எம்.எல்.ஏ.க்கள் அப்செட்!](https://minnambalam.com/k/2019/07/03/79)**

**[அமமுக அலுவலகம் மாறுகிறதா?](https://minnambalam.com/k/2019/07/03/29)**

**[10%: தலைவர்களுடன் அமைச்சர் ரகசிய சந்திப்பு!](https://minnambalam.com/k/2019/07/03/55)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *