இம்சை அரசன் 24ஆம் புலிகேசி திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி பின் தடைபட்டு நின்றுபோன நிலையில் சிம்பு தேவன் அடுத்து எந்த படம் இயக்கவுள்ளார் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் சத்தமில்லாமல் ஒருபடத்தின் பணிகளை நிறைவு செய்து தற்போது புரொமோஷனில் ஈடுபட்டுள்ளார்.
கசடதபற என்ற படத்தின் டைட்டிலை சூர்யா டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டதைத் தொடர்ந்து படத்தில் ஆண்டனி, ராஜா முகமது, காசி விஸ்வநாதன், பிரவீன் கே.எல்., விவேக் ஹர்ஷன், ரூபன் என ஆறு படத்தொகுப்பாளர்கள் பணியாற்றுவதாக அறிவிக்கப்பட்டது.
எம்.எஸ்.பிரபு, பாலசுப்பிரமணியம், விஜய் மில்டன், ஆர்.டி.ராஜ சேகர், சக்தி சரவணன், எஸ்.ஆர்.கதிர் ஆகிய ஆறு ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றுகின்றனர்.
சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர் ராஜா, ஜிப்ரான், சாம் சி.எஸ், பிரேம்ஜி அமரன், ஷான் ரோல்டன் என் ஆறு இசையமைப்பாளர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர்.
மேலும் சாந்தனு பாக்யராஜ், ஹரிஷ் கல்யாண், வெங்கட் பிரபு, பிரேம்ஜி, சந்தீப் கிஷன், விஜயலக்ஷ்மி, பிரியா பவானி சங்கர் என நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது.
ஆறு இசையமைப்பாளர்கள், ஆறு படத்தொகுப்பாளர்கள், ஆறு ஒளிப்பதிவாளர்கள் இணைந்திருப்பதால் ஆந்தலாஜி பாணியில் ஆறு குறும்படங்களை இணைத்து ஒரு முழுநீளப் படமாக உருவாக்கப்படுமோ என்ற யூகங்கள் கிளம்பின. ஆனால் இயக்குநர் சிம்பு தேவன் இதை மறுத்துள்ளார்.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அவர் அளித்த பேட்டியில், “அந்த வகையான பாணியில் உருவாகும் படங்களில் ஆறு குறும்படங்களுக்கும் எந்த சம்மந்தமும் இருக்காது. இது அப்படி அல்ல. ஒரே கதையில் உள்ள ஆறு பகுதிகளை கசடதபற திரைப்படம் காட்சிப்படுத்துகிறது” என்று கூறியுள்ளார்.
“பல்வேறு தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர், நடிகைகளுடன் இணைந்து பணியாற்றியது வித்தியாசமான, அனுபவமாக இருந்தது. இது வழக்கமாக அனைவரும் பயன்படுத்தும் பதிலாகக்கூட தெரியலாம். ஆனால் இது உண்மையிலேயே இப்போது நிரூபணமாகியுள்ளது. தயாரிப்பாளர்கள் வி.ராஜலக்ஷ்மி, டிரைடண்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் ஆகியோர் இந்த கதையை நம்பி அதை திறம்பட உருவாக்க உறுதுணையாக இருந்தனர். ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர்களுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக அடுத்ததாக டிரெய்லர், இசை வெளியீட்டை மேற்கொள்ளவுள்ளோம். ஜூலை மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்று கூறியுள்ளார்.
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[அமமுக தோல்விக்கான காரணங்கள்: அறிக்கை அனுப்பிய நிர்வாகிகள்!](https://minnambalam.com/k/2019/05/27/15)
**
.
**
[தலித்திய தனிமைப்படுதல் என்னும் அபாயம்!](https://minnambalam.com/k/2019/05/27/17)
**
.
**
[ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?](https://minnambalam.com/k/2019/05/26/55)
**
.
**
[அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!](https://minnambalam.com/k/2019/05/26/52)
**
.
**
[வரப் போகும் நாட்கள் கடினமானவை: சோனியா](https://minnambalam.com/k/2019/05/27/18)
**
.
.
�,”