அதிமுக சார்பில் விவாதங்களில் பங்கேற்க செய்தித் தொடர்பாளர்கள் தவிர யாரையும் அழைக்க வேண்டாம் என்று ஊடகங்களுக்கு அதிமுக அறிவுறுத்தியுள்ளது.
ஒற்றைத் தலைமை விவாதத்தையடுத்து அதிமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நேற்று சென்னை ராயப்பேட்டையிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து ஒருவார்த்தை கூட பேசப்படவில்லை. ஊடகங்களிலும், பொதுவெளியிலும் கட்சி சம்பந்தமாக அதிமுகவினர் பேசக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
தலைமைக் கழகத்தில் இருந்து அடுத்த அறிவிப்பு வரும்வரை எந்த ஒரு ஊடகத்திலும், பத்திரிகையிலும், சமூக தொடர்பு சாதனங்களிலும் எத்தகைய கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டாம் எனவும் கட்சியின் செய்தித் தொடர்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் அதிமுக தலைமைக் கழகம் இன்று (ஜூன் 13) ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வ கருத்துக்களை தெரிவிக்க செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர மற்றவர்கள் அதிமுக சார்பில் கருத்துக்களை ஊடகங்கள், பத்திரிகைகள் வழியாக தெரிவிப்பது முறையாக இருக்காது.
எனவே இனி அதிமுகவின் பிரதிநிதிகள் என்றோ அல்லது அதிமுகவின் பெயரை வேறு எந்த வகையிலோ பிரதிபலிக்கும்படி யாரையும் ஊடகங்கள் வழியாக கருத்துக்கள் தெரிவிக்க அழைக்கவோ, அனுமதிக்கவோ வேண்டாம். வேறு யாரையும் அழைத்து அவர்களை அதிமுக என்று அடையாளப்படுத்த வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு மீறும் பட்சத்தில் அந்த நபர்கள் அளிக்கும் பேட்டிகள், செய்திகளுக்கோ அதிமுக எந்த வகையிலும் பொறுப்பேற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ள அவ்வறிக்கையில், “இதுசம்பந்தமாக சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு எங்களை ஆட்படுத்தமாட்டீர்கள் என நம்புகிறோம்” என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
**
மேலும் படிக்க
**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
**[டிஜிட்டல் திண்ணை: விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல்- ஓ.பன்னீர் சூசகம்](https://minnambalam.com/k/2019/06/12/74)**
**[பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்](https://minnambalam.com/k/2019/06/12/20)**
**[சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/06/12/25)**
**[வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு](https://minnambalam.com/k/2019/06/12/22)**
�,”