wஇறப்புச் சான்றிதழ்: நீதிமன்றத்தில் தாக்கல்!

Published On:

| By Balaji

மறைந்த திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸின் இறப்புச் சான்றிதழ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

அதில், ஏ.கே.போஸின் வெற்றியைச் செல்லாது என அறிவித்து, தன்னைச் சட்டமன்ற உறுப்பினராக அறிவிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் இறுதி வாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி வேல்முருகன் முன்பு ஜூலை 20ஆம் தேதி நடைபெற்றது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருண், ‘போஸின் வேட்பு மனுவில் வைக்கப்பட்டது ஜெ.வின் கைரேகை அல்ல’ என்று தனது இறுதி வாதத்தை ஆணித்தரமாக வைத்திருந்தார். அதுபற்றி கடந்த ஜூலை 21ஆம் தேதி மின்னம்பலத்தில், [ஜெ. கைரேகை போலி: திமுக வாதம்!](https://minnambalam.com/k/2018/07/21/43) என்ற தலைப்பில் விரிவான செய்தியை வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ், கடந்த 2ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மரணம் குறித்து நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது, அவரது இறப்புச் சான்றிதழைத் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நேற்று (ஆகஸ்ட் 20) நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது, ஏ.கே.போஸின் இறப்பு சான்றிதழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share