Wஇன்ஃபோசிஸ் : 37,915 பேர் வெளியேற்றம்!

public

கடந்த 2016-17 நிதியாண்டில், இன்ஃபோசிஸ் நிறுவனத்திலிருந்து சுமார் 37,915 பேர் வெளியேறியுள்ளனர். மேலும் பணியாளர்களை வேலைக்குச் சேர்க்கும் நடவடிக்கை 65 சதவிகிதம் குறைந்துள்ளது.

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ், நடந்துமுடிந்த 2016-17ஆம் நிதியாண்டின் ஜனவரி – மார்ச் வரையிலான நான்காவது காலாண்டின் நிதி நிலை அறிக்கையை வெளியிட்டது. அதில், நிறுவனத்தின் லாப விவரங்களை வெளியிட்ட இன்ஃபோசிஸ், நிறுவனத்தில் பணிவிலகல், பணிநீக்கம், ஆட்சேர்ப்பு ஆகியவை குறித்த விவரங்களைத் தெரிவித்தது. கடந்த நிதியாண்டில் நிறுவனத்திலிருந்து 37,915 பேர் வெளியேறியுள்ளனர். இது, முந்தைய ஆண்டைவிட 19 சதவிகிதம் கூடுதலாகும். இதற்கு முந்தைய 2015-16ஆம் நிதியாண்டில், 34,688 பேர் வெளியேறியிருந்தனர்.

ஆட்சேர்ப்பு நடவடிக்கையைப் பொருத்தவரையில், கடந்த 2016-17 நிதியாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 6,320 பேர் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் 2015-16ஆம் நிதியாண்டில் பணியில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,857. எனவே, கடந்த ஆண்டில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை 65 சதவிகிதம் குறைந்துள்ளது. மேலும் ஜனவரி – மார்ச் காலாண்டில் பணியில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 601. ஆனால், 2015-16 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 661 பேர் பணியில் சேர்க்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

10 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் அனுபவமிக்க ஊழியர்களை பணிக்குச் சேர்க்கும் நடவடிக்கையும் சரிந்துள்ளது. அதாவது, 2015-16 நிதியாண்டில் 24,719 பேர் பணியில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், இந்த நிதியாண்டில் வெறும் 18,979 பேர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். 2016-17 நிதியாண்டில் இன்ஃபோசிஸில் பணியாற்றும் ஒட்டுமொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 1,94,044லிருந்து 2,00,364 ஆக உயர்ந்துள்ளது. ஆட்டோமேஷன் என்று கூறப்படும் தானியங்கிமயம் அதிகரித்துவருவதால் ஆட்களுக்கான தேவை இதுபோன்ற தொழில்நுட்ப நிறுவனங்களில் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *