ஒரு ராட்சத கழுகின் பழைய புகைப்படங்கள் சமூக ஊடக தளங்களில் பரவலாக பகிரப்பட்டுக் கடந்த சில நாட்களாக வைரலாகி வருகின்றன. காரணம்? இந்த கழுகு ஒரு பறவையைப் போலவும், ஆடை அணிந்த மனிதனைப் போலவும் உள்ளதால் இணையவாசிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.
ரெடிட் மற்றும் ட்விட்டரில் இந்த கழுகின் மூன்று வகையான புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகிறது. ஒரு மனிதனின் அருகில் கழுகு அமர்ந்திருப்பது போன்றும். மரக் கிளையில் அமர்ந்திருப்பது போன்றும், க்ளோஸ் அப்பில் எடுத்த புகைப்படம் ஒன்றும் வைரலாகியுள்ளது. இதைப் பார்த்த பலரும் இது மனிதனா அல்லது கழுகா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
”இது போலியானது என்று நான் நினைத்தேன், அருகில் சென்று பார்க்கும்போதுதான் தன்னிகரற்ற பறவை என்று தெரியவந்தது. இதை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை” என்று கூறி அக்டோபர் 1ஆம் தேதி மரிசா என்ற பயனரால் இந்தப் படம் ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது,
அந்த கழுகின் நெருக்கமான புகைப்படங்களைக் காணும் பலரும் அதன் பார்வை மனிதன் பார்ப்பதைப் போன்றே இருக்கிறது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். வைரலாக வேண்டும் என்று வேடமிட்டுப் பரப்புகிறார்கள் என்றும் தெரிவிக்கின்றனர்.
இந்த புகைப்படத்தில் உள்ளது ஹார்பி வகையிலான கழுகுகள் தென் அமெரிக்க மலைக்காடுகளில் வசிக்கும் ஒரு மிகப் பெரிய பறவை வகை ஆகும்.
�,”