தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்கும் அரசு அனைவருக்கும் மின் வசதியை வழங்குவதில் அதிக கவனம் செலுத்தும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.
இந்தியாவின் மின்சாரப் பயன்பாடு தொடர்பான ஆய்வை *புரூக்கிங்ஸ் இந்தியா* நிறுவனம் மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்து ஆட்சிக்கு வரும் அரசு தனது ஐந்தாண்டுக் கால ஆட்சியில் மின் வசதியைச் சிறப்பாக வழங்குவதில் அதிக கவனம் செலுத்தும் என்று தெரிவித்துள்ளது. பல்வேறு அமைச்சகங்களை ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் இணைப்பதையும் இந்த ஆய்வில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் மே 23ஆம் தேதி வரவிருக்கும் நிலையில் அடுத்த அரசு எந்தெந்தத் துறைகளில் அதிக கவனம் செலுத்தும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
மத்திய மோடி அரசின் தற்போது செயல்பாட்டில் இருக்கும் சௌபாக்யா திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் மின்சார இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. எனினும் மின் விநியோகத்தை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் இந்தியா சிறப்பான வளர்ச்சியைக் கொண்டிருந்தாலும் மின் கட்டணங்கள் மற்றும் உற்பத்திச் செலவுகள் குறைக்கப்பட வேண்டும். அதேபோல, சுற்றுச்சூழல் மாசுபாடில்லா எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை நோக்கி இந்தியா பயணிக்கத் தொடங்கியுள்ளது. இருப்பினும் பேட்டரி தொழில்நுட்பத்தில் உள்ள அதிக செலவுகள் அதற்குச் சற்று சவாலாக உள்ளன.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: கமலின் நாக்கு- அமைச்சரை பாராட்டிய முதல்வர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/88)
**
.
**
[விமர்சனம்: மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/7)
**
.
**
[மோடி காய்ச்சல்: சந்திரபாபு நாயுடு பரபரப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/52)
**
.
**
[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)
**
.
.
�,”