வரும் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சென்னையில் தங்க வேண்டுமென கட்சி தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகள் சார்பில் மீரா குமாரும் போட்டியிடுகின்றனர். தேர்தலில் அதிமுக-வின் மூன்று அணிகளும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழகத்தை சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் வாக்களிக்க தலைமைச் செயலகத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் நாளை 15ஆம் தேதி மற்றும் நாளை மறுநாள் 16ஆம் தேதி அதிமுக அம்மா அணி எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் சென்னையில் தங்கியிருக்க வேண்டுமென அதிமுக தலைமை கழகம் உத்தரவிட்டுள்ளது. எம்.எல்.ஏ-க்கள் வாக்களிக்க வசதியாக சென்னையில் தங்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.�,