“கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்று சொல்லப்பட்ட கூற்றை மக்கள் உடைத்துள்ளனர்” என்று பொள்ளாச்சியில் நடந்த நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 37 இடங்களில் வெற்றிபெற்றது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் திமுக சார்பாக நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நேற்று (ஜூன் 12) நடைபெற்ற நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டார். எம்.பி.க்கள் பொள்ளாச்சி சண்முகசுந்தரம், ஈரோடு கணேசமூர்த்தி, கரூர் ஜோதிமணி ஆகியோரும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய திமுக மக்களவை கொறடா ஆ.ராசா,**“இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் தலைவராக ஸ்டாலின் உள்ளார். மக்களவைத் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் ஸ்டாலின் ராஜதந்திரத்தை டெல்லி தலைவர்கள் பாராட்டுகிறார்கள். ஸ்டாலின் நிலையை மம்தாவும் மாயாவதியும் எடுத்திருந்தால் நாட்டின் நிலை இப்படி இருந்திருக்காது” ** என்று தெரிவித்தார்.
இறுதியாக உரையாற்றிய திமுக தலைவர் ஸ்டாலின், “தேர்தல் நடந்த சமயத்தில் வாக்கு கேட்பதற்காக உங்களைத் தேடி ஓடோடி வந்தேன். அதுபோல நன்றி கூறுவதற்காகவும் ஓடோடி வந்துள்ளேன். திமுக கூட்டணிக்கு வாக்களிக்காதவர்களுக்குச் சேர்த்து குரல் கொடுத்து ஏன் திமுகவுக்கு நான் வாக்களிக்கவில்லை என்று எண்ணக் கூடிய வகையில் திமுக எம்.பி.க்கள் செயல்பட உள்ளனர்” என்றார்.
தொடர்ந்து, கொங்கு மண்டலத்தை அதிமுகவின் கோட்டை என்று கூறுவார்கள். ஆனால், அதிமுகவின் கோட்டை என்று கூறப்பட்ட கூற்றை மக்கள் உடைத்து ஆயிரத்தில் அல்ல, லட்சத்தில் வெற்றிபெற வைத்திருக்கிறார்கள் மக்கள் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டவர்,
**“இடைத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை அதிமுக தக்கவைத்துக் கொண்டது. இதனால் அதிமுகதான் வெற்றிபெற்றுள்ளது என்று சிலர் கூறுகிறார்கள். 22 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் திமுக 13 இடங்களில் வெற்றிபெற்றது. ஆளுங்கட்சியான அதிமுக 9 இடங்களில் மட்டுமே வென்றது. இதில் 13 பெரிதா அல்லது 9 பெரிதா? அதிமுகவிடமிருந்த 12 தொகுதிகளை திமுக கைப்பற்றியுள்ளது என்றால் இதில் யாருக்கு வெற்றி” எனக் கேள்வி எழுப்பினார். இப்போது வேண்டுமானால் ஆட்சியமைக்க முடியாமல் போயிருக்கலாம். ஆனால், விரைவில் திமுக ஆட்சிப் பொறுப்பில் அமரப் போகிறோம். அதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.**
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல்- ஓ.பன்னீர் சூசகம்](https://minnambalam.com/k/2019/06/12/74)**
**[பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்](https://minnambalam.com/k/2019/06/12/20)**
**[சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/06/12/25)**
**[ஒற்றைத் தலைமை பற்றி பேசவில்லை!](https://minnambalam.com/k/2019/06/12/46)**
**[வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு](https://minnambalam.com/k/2019/06/12/22)**
�,”