அடா ஷர்மா நடிக்கும் புதிய பாலிவுட் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார்.
சிம்பு நடிப்பில் வெளியான இது நம்ம ஆளு படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றியவர் அடா ஷர்மா. பிரபு தேவா நடித்த சார்லி சாப்ளின் 2 படத்தில் இரு கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தித் திரையுலகங்களில் வலம் வரும் அடா ஷர்மாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் முகத்தில் மீசை முளைத்துள்ளது போல் தோன்றியுள்ளார். தற்போது அவர் நடிப்பில் 3 இந்திப் படங்களின் படப்பிடிப்பு நடைபெற்றுவரும் நிலையில் மேன் டு மேன் படத்தை பிரதிபலிக்கும் வகையில் அந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
அப்படத்தில் நவீன் கஸ்தூரியா கதாநாயகனாக நடிக்கிறார். நவீன் கதாபாத்திரம் அடா ஷர்மா மேல் காதல் கொண்டு திருமணம் முடிக்கும். அதன்பின் அடா பெண் இல்லை என்பதும், அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறிய ஆண் என்பதும் தெரியவரும். சவாலான கதாபாத்திரங்களை துணிந்து தேர்ந்தெடுத்து நடிக்கும் அடா ஷர்மா இந்த கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்தது ஆச்சர்யம் இல்லை என்கின்றனர் பாலிவுட் வட்டாரத்தில்.
.
.
**
மேலும் படிக்க
**
.
. **
[ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!](https://minnambalam.com/k/2019/05/24/9)
**
.
**
[திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!](https://minnambalam.com/k/2019/05/24/30)
**
.
**
[அமேதியில் ராகுல் வீழ்ந்த பின்னணி!](https://minnambalam.com/k/2019/05/24/33)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க திமுக வியூகம்!](https://minnambalam.com/k/2019/05/23/167)
**
.
**
[மோடிகளை உருவாக்கும் மோடி](https://minnambalam.com/k/2019/04/11/19)
**
.
.
�,”