uஉடலையே சின்னமாக்கிய ரசிகன்: கோலி மகிழ்ச்சி!

Published On:

| By Balaji

�இந்திய கிரிக்கெட் அணி சிறப்பான ஆட்டத்தை, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெளிப்படுத்தியிருக்கிறது. கோலி தலைமையிலான இந்த அணி சிறப்பாக விளையாடியதைக் குறித்து பேசுவதைவிட, நேற்றைய போட்டியைப் பற்றிக் குறிப்பிடக்கூடிய வகையில் மிகச் சிறப்பான சம்பவம் ஒன்று அங்கு நடந்தேறியது.

போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துக்கொண்டு வெளியே வந்த கோலிக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. அவருடைய ஜெர்சியில் பதிவு செய்யப்பட்டுள்ள பெயர் மற்றும் எண் ஆகியவற்றை தனது உடலில் பச்சை குத்திக்கொண்டு ஒரு மனிதர் நின்றுகொண்டிருந்தார். அவரை அருகே அழைத்த கோலி, உடலிலிருந்த அத்தனை டாட்டூக்களையும் நிதானமாகப் பார்த்தார்.

அங்கு பொறிக்கப்பட்டிருந்த ஒவ்வொரு எண்ணும், கோலியின் சாதனைகளைச் சொல்லிக்கொண்டிருந்தன. இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு, அவரைப்பற்றி விசாரித்த கோலி மிகவும் நெகிழ்ந்து போனார். இந்திய அணி விளையாடும் அத்தனை போட்டிகளிலும் கலந்துகொள்ளும் அந்த நபர், கோலியின் அதி தீவிர ரசிகர். இளம் வயதிலேயே பல சாதனைகளைச் செய்துவரும் கோலியின் திறமையால் உந்தப்பட்டவர், கோலியின் சாதனைகளைத் தனது உடலில் டாட்டூவாகப் பதிவு செய்திருந்தார்.

பொதுவாக கிரிக்கெட் வீரர்களின் சாதனைகளை எங்காவது ஓரிடத்தில் மியூசியம் அமைத்துப் புகழ் பரப்புவது வழக்கம். ஆனால், கோலிக்கு வேறு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த மனிதர் எங்கெல்லாம் செல்கிறாரோ, அங்கெல்லாம் கோலியின் புகழ் பரவும்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share