xஅதிமுக 20 -திமுக 5 : விக்கிரவாண்டி வித்தியாசம்!

Published On:

| By Balaji

விக்கிரவாண்டி இடைத் தேர்தல் களத்தில் கிராம அளவில் ஒரு ரகசிய மாற்றம் நடந்துகொண்டிருக்கிறது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில நாட்கள் முன்பே அதிமுக சார்பில் ஒவ்வொரு பூத் அளவிலும் , சுவர் விளம்பரங்கள் உள்ளிட்ட ஆயத்தப் பணிகளுக்கு 20 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் கடந்த 30 ஆம் தேதி பிரம்மாண்ட முறையில் செயல்வீரர்கள் கூட்டத்தை மாநாடு போல நடத்தி, அதிமுக நிர்வாகிகள் அனைவருக்கும் பிரியாணி விருந்து உட்பட மீண்டும் கரன்சி கவனிப்பு செய்தார் அமைச்சர் சி.வி. சண்முகம்.

அதிமுக இப்படி வேகமாக போய்க் கொண்டிருக்க, திமுகவும் சளைக்காமல் பொறுப்பாளர்களைக் களமிறக்கிவிட்டிருக்கிறது. திமுகவில் கடந்த மூன்று நாட்களாக ஒவ்வொரு கிராமமாக சென்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பூத்-தின் உள்ளூர் நிர்வாகிகளை வெளியூர் நிர்வாகிகள் சந்தித்து வருகின்றனர். அக்டோபர் 1 முதல் முழு வீச்சில் திமுக களமிறங்கிவிட்டது. இதை ஒட்டி ஒவ்வொரு பூத் அமைப்புக்கும் தலா ஐயாயிரம் ரூபாய் நேற்று வழங்கப்பட்டிருக்கிறது. இதை வைத்துதான் சுவர் விளம்பரம் போன்ற ஆரம்பகட்டப் பணிகள், கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைத்துக் கூட்டி வருவது உள்ளிட்டவற்றை திமுக நிர்வாகிகள் மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.

வழக்கம்போல அதிமுகவினரின் கைகளில் பணம் அதிகமாகப் புழங்க, திமுகவினரோ பார்த்துப் பார்த்து செலவு செய்து வருகின்றனர். அமைச்சர் சி.வி. சண்முகம் செயல் வீரர்கள் கூட்டத்துக்கு முன்பே, ‘தலைகாய்ஞ்சு போயிருக்கும் திமுக நிர்வாகிகளை என்ன செலவானாலும் கவனித்து தேர்தல் வேலை பார்க்காமல் ஆஃப் பண்ணுங்க’ என்று அதிமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

இந்த நிலையில் அதிமுகவினருக்கு 20 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்ட வகையில், திமுகவோ முதல் கட்ட நிதியாக 5 ஆயிரம்தான் கொடுத்திருக்கிறது. இது பல திமுக நிர்வாகிகளை சுணக்கமடைய வைத்திருக்கிறது. தங்களுக்குக் கீழ் இருக்கும் நிர்வாகிகளிடம் பணமில்லை என்று சொல்ல முடியாமல் திமுக கிராம நிர்வாகிகள் பலர் தங்கள் கை காசை போட்டு செலவு செய்து வருகின்றனர். இதை கிராம அளவிலான அதிமுக நிர்வாகிகள் நேற்று அமைச்சர் சி.வி. சண்முகத்திடம் பாஸ் பண்ண, கிராம திமுக நிர்வாகிகளைக் குறிவைத்து அடுத்த ஸ்பெஷல் அசைன்மென்ட்டை கொடுத்திருக்கிறார் சி.வி. சண்முகம்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share