vவேலூர்: ஒரே நாளில் 10 போலி மருத்துவர்கள் கைது!

Published On:

| By Balaji

வேலூர், குடியாத்தம், காட்பாடி பகுதிகளில் கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் போகும் நிலையில், போலி டாக்டர்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. நேற்று (ஜூலை 27) ஒரே நாளில் 10 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் க்ளினிக் சீல் வைக்கப்பட்டன.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு அரசு மருத்துவமனை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில நகரங்களில் போலி டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதாக புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது வேலூர், குடியாத்தம் மற்றும் காட்பாடி பகுதிகளில் 10 போலி டாக்டர்கள் பிடிப்பட்டனர். இவர்களை கைது செய்த அதிகாரிகள், க்ளினிக்கை சீல் வைத்தனர்.

இவர்களைப் பற்றிய முழு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. வழக்கு பதிவு செய்யப்பட்டபின் முழு விவரமும் தெரியவரும் என்கிறார்கள் காவல் துறையினர்.

**-ராஜ்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share