Dரிலாக்ஸ் டைம்: வெல்ல சீடை!

Published On:

| By Balaji

கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்குப் படைக்கும் உணவுப் பொருட்களில் முக்கிய இடம்பிடிப்பது சீடை வகைகள். இவற்றில் உப்பு சீடை, இனிப்பு சீடை என்று இருவகைகள் இருந்தாலும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது வெல்ல சீடை. கிருஷ்ண ஜெயந்தி மட்டுமல்ல… சாதாரண நாட்களிலும் இந்த வெல்ல சீடையைச் செய்துவைத்துக் கொண்டு ரிலாக்ஸ் டைமில் சாப்பிடலாம்.

**எப்படிச் செய்வது?**

வாய் அகன்ற ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அரிசி மாவு, ஒரு டேபிள்ஸ்பூன் வறுத்த உளுந்து மாவு, 25 கிராம் வெண்ணெய், ஒரு சிட்டிகை உப்பு, ஒரு டீஸ்பூன் ஏலக்காய்ப்பொடி சேர்த்து கலந்து கொள்ளவும். மாவு பிசைய தேவையான அளவு தேங்காய்ப்பாலுடன், அரை கப் துருவிய வெல்லத்தை கரைத்து கலந்துவைத்துள்ள மாவில் ஊற்றி பதமாக சப்பாத்தி மாவு போல பிசைந்துகொள்ளவும். சிறு சிறு உருண்டையாக உருட்டி சுத்தமான துணியில் பரப்பி 2-3 மணி நேரம் அப்படியே விட்டு விடவும். (ஈரப்பதத்தை துணி உறிஞ்சு கொள்ளும், வெடிக்காது சீடை) பிறகு வாணலியில் பொரிப்பதற்குத் தேவையான அளவு நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து அடுப்பை பற்றவைத்து, சூடானதும் வாணலி கொள்ளும் அளவுக்கு சீடையைப் போட்டு மொறுமொறுப்பாகப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

**சிறப்பு**

வெல்லத்தில் வைட்டமின் சி, இரும்புச்சத்து அதிக அளவில் இருக்கிறது. தேங்காய்ப்பால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. இவற்றின் கலவையான வெல்ல சீடை அனைவருக்கும் ஏற்றது. ஆரோக்கியமானது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share