சென்னை புறநகர் பகுதிகளுக்கு கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மின்சார ரயில்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் விதமாகவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க ஏதுவாகவும் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்.
அதன்படி சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே வார நாட்களில் 114 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 140 மின்சார ரயில்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரை-வேளச்சேரி இடையே இயக்கப்பட்டு வந்த 76 மின்சார ரயில்கள், தற்போது 96 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
**-ராஜ்**
.�,