�
குளிர்காலத்தில் சிலருக்கு சைனஸ் அதிகமாகலாம். வல்லாரை, சைனஸ் பிரச்சினையைக் கட்டுப்படுத்த உதவும். தேன் ஞாபகசக்தியை அதிகப்படுத்தும் தன்மைகொண்டது. பொதுவாக, ஒருவர் அளவுக்கதிகமாக யோசித்தால், உடலில் சூடு அதிகரிக்கக்கூடும். இந்த ரெசிப்பியில், குளிர்ச்சி நிறைந்த நன்னாரியும் இருப்பதால் அந்தப் பிரச்சினை ஏற்படாது.
**எப்படிச் செய்வது?**
ஒரு கைப்பிடி வல்லாரையைக் கழுவி சுத்தம் செய்யவும். ஒன்றரை கப் தண்ணீரைக் கொதிக்கவிட்டு, அதில் வல்லாரை இலை, நன்னாரி வேர் சிறு துண்டு போட்டு, மறுபடியும் நன்றாகக் கொதிக்கவிடவும். தண்ணீர் ஒரு கப்பாக வற்றியவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும். ஆறியவுடன் வடிகட்டி, தேவையான அளவு தேன் அல்லது நாட்டுச்சர்க்கரை மற்றும் அரை டீஸ்பூண் எலுமிச்சைப்பழச்சாறு சேர்த்துப் பருகவும்.
**சிறப்பு**
மாதவிடாய் காலத்தில் பெண்களின் உடலில் அதிகரிக்கும் உடல்சூட்டைத் தணிக்க, அந்த நாள்களில் அவர்கள் இதைப் பருகலாம். ஞாபகசக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், நரம்பு சார்ந்த பிரச்சினைகள் இருப்பவர்களுக்கும் வல்லாரை மிக நல்லது. தேர்வுக்காலத்தில், பள்ளிக் குழந்தைகளுக்கான சிறந்த ரெசிப்பியாக வல்லாரை சர்பத்தைப் பரிந்துரைக்கலாம்.�,