வாழைப்பூவில் பொரியல், கூட்டு, வடை செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்றைய ரிலாக்ஸ் டைமில் வாழைப்பூவில் மொறுமொறுப்பான பக்கோடா செய்து சாப்பிட்டு புத்துணர்ச்சி பெறுங்கள்.
**எப்படிச் செய்வது?**
ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு வாழைப்பூவை சுத்தப்படுத்தி பொடியாக நறுக்கி மோரில் போட்டு அலசி எடுத்துக்கொள்ளவும். அத்துடன் ஒரு கப் கடலை மாவு, ஒரு டேபிள்ஸ்பூன் சோள மாவு, ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரகம், காரத்துக்கேற்ப மிளகாய்த் தூள், நறுக்கிய வெங்காயம், தேவையான அளவு கொத்தமல்லி, கறிவேப்பிலை, தண்ணீர் சேர்த்து பக்கோடா மாவு பதத்தில் உதிரியாக பிசைந்துகொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கொஞ்சம் கொஞ்சமாக மாவு கலவையை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
**சிறப்பு**
கர்ப்பப்பை காக்கும்… ஆயுள் கூட்டும்… குழந்தையின்மை போக்கும் சக்தி கொண்ட வாழைப்பூவை அடிக்கடி ஏதோ ஒருவகையில் உணவில் சேர்த்து வந்தால், கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இதனால், நீரிழிவு கட்டுக்குள் இருக்கும்.
�,