]டாஸ்மாக் ஊழியர்களுக்கு தடுப்பூசி!

public

தமிழகத்தில் விரைவில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது மூன்றாவது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அனைத்து அரசு ஊழியர்களும் இரண்டு வாரத்திற்குள் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால், தமிழகத்தில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் மக்கள் அதிகமாக கூடுகின்ற இடங்களில் ஒன்றான டாஸ்மாக் கடைகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு விரைவில் தடுப்பூசி போடுவதற்கான பணிகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் 5,300 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இங்கு 26,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இதனால், டாஸ்மாக் கடைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில், உள்ளே வருபவர்கள் கைகளை சுத்தம் செய்வதற்கு வசதியாக நுழைவுவாயிலில் சானிடைசர் வைத்திருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, வரிசையில் நிற்கவைக்க வேண்டும், கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.

மேலும், அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கொரோனா தடுப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை, அந்தந்த மாவட்ட மேலாளர்கள் தலைமையிலான குழு ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு விரைவில் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும். முதற்கட்டமாக ஊழியர்களை வயது வாரியாக கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. முதலில் 45 வயதிற்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட பின்பு, மற்றவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, வழிபாட்டு தலங்கள், திரையரங்குகள், போக்குவரத்து உள்ளிட்ட பலவற்றிற்கு கட்டுப்பாடுகள் விதித்த நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

அதுபோன்று, கூட்டுறவு துறை சார்பில் நடத்தப்படும் ரேஷன் கடைகளில், ஆண்களுக்கு இணையாக பெண்களும் பணிபுரிகின்றனர். அவர்களுக்கும் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்குமாறு கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, அவர்களுக்கும் இலவசமாக தடுப்பூசி போடும் பணியை விரைவில் தொடங்க கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது.

**வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.