V2.0: க்ளைமாக்ஸ் யூடியூபில் ரிலீஸ்!

public

�2.0 திரைப்படத்தின் முக்கியமான காட்சியான க்ளைமாக்ஸை யூடியூபில் ரிலீஸ் செய்திருக்கிறது லைகா புரொடக்‌ஷன்ஸ். படத்தில் அதிகமான திருப்புமுனைகளும், ஆச்சரியங்களும் நிறைந்திருக்கிறது என்ற ரசிகர்களின் கருத்தால் நிரம்பி வருகின்றன 2.0 வெளியாகியுள்ள தியேட்டர் சீட்டுகள். ஆனால், இந்த முக்கிய காட்சியை லைகா ஏன் ரிலீஸ் செய்ததெனத் தெரியாமல் ரசிகர்களே குழப்பத்தில் இருக்கின்றன.

அக்‌ஷய் குமார் பிரமாண்டமாக உருமாறும்போது, ரஜினியும் 2.0 கேரக்டரில் பல்லாயிரக்கணக்கான ரோபோட்களுடன் இணைந்து பிரமாண்ட ரோபோட்டாக உருமாறியிருப்பார். இந்தக் காட்சி முதல் பாகத்திலேயே இடம்பெற்றிருந்ததால், இரண்டாம் பாகத்தில் மைக்ரோ ரோபோட்டாக 3.0 எனும் புதிய கேரக்டரை அறிமுகப்படுத்தி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருப்பார்கள். இது படம் பார்க்கும்போது எதிர்பாராத திருப்புமுனையாக இருந்திருக்கும். ஆனால், இந்த முக்கிய காட்சியை ஏன் ரிலீஸ் செய்தார்கள் எனும் கேள்வியும், அந்த யூடியூப் வீடியோவின் கமெண்ட்களில் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது.

தியேட்டரில் படம் பார்க்கும்போது முக்கிய காட்சிகளை படம்பிடித்து யூடியூபில் வெளியிடும் ரசிகர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தியேட்டர் நிர்வாகம் எச்சரிப்பது வழக்கம். காரணம், படத்தின் முக்கியமான காட்சிகள் வெளியாகிவிட்டால், ரசிகர்களுக்குப் படம் பார்க்கும்போது அதன் தாக்கம் சரிவர சென்றடையாது. ஆனால், இப்போது படத்தின் புரமோஷனுக்காக லைகாவே அதைச் செய்திருக்கிறது.

[2.0 க்ளைமாக்ஸ் வீடியோ](https://www.youtube.com/watch?v=YsDCluiGfaY)�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *