தமிழ், தெலுங்கு திரையுலகங்களில் கவனிக்கத்தக்க கதாபாத்திரங்களில் நடித்துவந்த தாப்ஸி பன்னு தற்போது பாலிவுட்டிலும் அதைத் தொடர்கிறார். தனது கருத்துக்களையும் தயங்காமல் துணிச்சலாகத் தெரிவித்துவரும் தாப்ஸி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றிய பிகினி புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.
தாப்ஸி, வருண் தவனுடன் இணைந்து நடித்த ஜுட்வா 2 (Judwaa 2) படத்தின் புரோமோஷன் பணிகள் நடைபெற்றுவருகின்றன. தாப்ஸி இதில் கம்பீரமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாடல் காட்சி ஒன்றில் பிகினி உடையில் வலம் வரும் தாப்ஸிக்கு பாலிவுட் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த உடை அவரது உடலமைப்புக்குப் பொருத்தமாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர். இந்த வரவேற்பைத் தொடர்ந்து தாப்ஸி நேற்று (செப்டம்பர் 13) தனது டிவிட்டர் பக்கத்தில் தான் கடற்கரையில் நிற்கும் மேலும் இரு பிகினி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த படத்திற்கு பலரும் விருப்பம் தெரிவித்தும் ரீ டிவிட் செய்தும்வருகின்றனர்.
வருண் தவன், ஜேக்லின் ஃபெர்ணாண்டஸ், தாப்ஸி நடித்துள்ள ஜுட்வா 2 படத்தை டேவிட் தவன் இயக்கியுள்ளார். இது செப்டம்பர் 29ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
�,”