Vவேலை நேரத்தில் பயண நேரம் சேருமா?

Published On:

| By Balaji

இந்தியாவில் அலுவலகப் பணிக்குச் செல்லும் 61 சதவிகிதத்தினர் தங்களது அலுவலகப் பயண நேரத்தையும் அலுவலகப் பணி நேரத்தில் சேர்க்குமாறு விரும்புவதாக சர்வதேச ஆய்வு ஒன்று கூறுகிறது.

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஐ.டபிள்யூ.ஜி. நிறுவனம் சர்வதேச அளவில் பணியிடச் சூழல் குறித்த ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வு உலகின் 80 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு துறைகளின் 15,000க்கும் மேற்பட்ட அலுவலர்களிடையே நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில், அலுவலகம் செல்லும் பணியாளர்கள் தங்களது பயண நேரத்தையும் அலுவலக நேரத்தில் சேர்க்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அதேபோல, 80 சதவிகித அலுவலகங்கள் தங்களது பணியாளர்களுக்கான வேலை நேரத்தை அவர்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து வருவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

அலுவலகத்துக்குச் செல்லும் நேரமும் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் நேரமும் தங்களது தனிப்பட்ட கால நேரத்தில் சேராது எனவும், அதை அலுவலக நேரத்தில் சேர்த்து நிர்ணயிக்க வேண்டும் எனவும் இந்த ஆய்வில் கோரிக்கை விடுத்துள்ளனர். சர்வதேச அளவிலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 42 சதவிகிதப் பணியாளர்கள் இதே கருத்தை முன்வைத்துள்ளனர். அலுவலகப் பணி நேரமானது பணியாளர்களுக்கு ஏற்றவாறு இல்லையென்றால் அந்நிறுவனங்கள் திறமைமிக்க பணியாளர்களை இழக்க வேண்டிய சூழல் இருக்கும் என்று இந்த ஆய்வு எச்சரிக்கிறது. இந்த நடைமுறையைப் பின்பற்றி வருவதாக இந்தியாவில் 81 சதவிகித நிறுவனங்களும், சர்வதேச அளவில் 77 நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share