Vவீடு தேடி வரும் வங்கிச் சேவைகள்!

Published On:

| By Balaji

zநாட்டின் ஒவ்வொரு குடிமகனின் வீட்டுக்கே வங்கிச் சேவைகள் கொண்டு செல்லப்படும் என்று உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செப்டம்பர் 1ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா போஸ்ட் கட்டண வங்கி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் கலந்துகொண்டார். அப்போது அவர், அஞ்சல் அலுவலகங்களின் வாயிலாக ஒவ்வொரு குடிமகனின் வீட்டுக்கும் வங்கிச் சேவைகளைக் கொண்டு செல்லும் பணியை இந்தியா போஸ்ட் கட்டண வங்கி மேற்கொள்ளும் என்று கூறினார்.

அவர் பேசுகையில், “நிகரற்ற அஞ்சல் அலுவலக அமைப்பு, அஞ்சல் ஊழியர்கள், கிரமீன் தக் சேவகர்கள் வாயிலாக ஒவ்வொரு குடிமகனின் வீட்டுக்கே வங்கிச் சேவைகளை இந்தியா போஸ்ட் கட்டண வங்கி எடுத்துச் செல்லும்” என்று கூறினார். மற்ற வங்கிகளைப் போலவே இந்தியா போஸ்ட் கட்டண வங்கியும் சேவைகளை வழங்கும். இந்த வங்கி, ரூ.1 லட்சம் வரையில் டெபாசிட் தொகைகளை ஏற்றுக்கொள்ளும். மேலும், மொபைல் பரிவர்த்தனை, ஏடிஎம் உள்ளிட்ட சேவைகளையும் வழங்கும். இந்த வங்கியின் 100 விழுக்காட்டுப் பங்கும் ஒன்றிய அரசுக்குச் சொந்தமானதாகும்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share