Vவிஜய் 63: நயன்தாராவின் தந்தை யார்?

Published On:

| By Balaji

விஜய் நடிக்கும் புதிய படத்தில் பேராசிரியரும் நடிகருமான கு.ஞானசம்பந்தன் இணைந்துள்ளார்.

அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்துவருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் விஜய்யைக் காண அவரது ரசிகர்கள் குவிந்துவரும் வீடியோக்கள் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுவந்தன. படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

ஜாக்கி ஷெராஃப், கதிர், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, ஆனந்த் ராஜ், ரெபா மோனிகா ஜான் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில் மற்ற நடிகர்கள் என்னென்ன வேடங்களில் நடிக்கின்றனர் என்பது குறித்த தகவலை படக்குழு வெளியிடவில்லை. இந்த நிலையில் படத்தில் தற்போது கு.ஞானசம்பந்தன் இணைந்துள்ளார். விருமாண்டி, சிவா மனசுல சக்தி, ரஜினி முருகன் எனப் பல படங்களில் நடித்த அவர் இந்தப் படத்தில் நயன்தாராவுக்குத் தந்தையாக நடிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share