Vரிலீசுக்குத் தயாரான ‘ஹவுஸ் ஓனர்’

Published On:

| By Balaji

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘ஹவுஸ் ஓனர்’ திரைப்படம் வரும் ஜூன் 28 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் ஏற்பட்ட வெள்ளம், தமிழகம் முழுவதையும் ஸ்தம்பிக்க வைத்தது. உணவு, குடிநீர் இருப்பிடம் என அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் பல்லாயிரக்கணக்கான மக்கள் அல்லல்பட்டனர். அனைத்து தொலைத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு, மொத்த சென்னையையும் உலுக்கி எடுத்த அந்த இயற்கைப் பேரழிவிலிருந்து மீண்டு வர மக்கள் கொடும் துயருற்றனர். அந்த சென்னை வெள்ளத்தின் கதையை மையமாக வைத்து லட்சுமி ராமகிருஷ்ணன், ஹவுஸ் ஓனர் என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் கிஷோர் முக்கிய கதாபாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார்.

லட்சுமி ராமகிருஷ்ணன், ஹவுஸ் ஓனர் திரைப்படம் ஜூன் 28ஆம் தேதி வெளிவர தயாராக இருக்கிறது என்று குறிப்பிட்டு கீழ்கண்ட செய்தியை வெளியிட்டுள்ளார். அதில், உங்கள் அனைவரின் சிறந்த வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டு ஹவுஸ் ஓனர் திரைப்படம் ஜூன் 28 ஆம் தேதி வெளிவரத் தயாராக உள்ளது.

சென்னை வெள்ளத்தின் பின்னணியில் நடந்த உண்மையான சம்பவம். மற்றும் உண்மையான மனிதர்களின் தாக்கத்தால் உருவான கதை, ‘ஹவுஸ் ஓனர்’.

நடிகர்களும் குழுவினரும் குறைவான ஊதியம் மற்றும் வசதிகளுக்கு ஒப்புக்கொண்டனர். இதனால் அனைத்து நிதியும் தரமான படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்பட்டது. 50 லட்சம் செலவில் செட் அமைக்கப்பட்டது. இந்த படம் ஆட்டம்ஸில் மிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.

மெதுவாக வளரும் ஒரு திரில்லர் திரைப்படம் என்று சொல்லலாம். வித்தியாசமான வாழ்க்கை மட்டும் தனித்துவமான பாலக்காடு உச்சரிப்பும் நீங்கள் காண்பீர்கள்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஹவுஸ் ஓனர் திரைப்படத்தை, லட்சுமி ராமகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை அவரது கணவர் கோபாலகிருஷ்ணன் ராமகிருஷ்ணன் தயாரித்துள்ளார். நடிகர் கிஷோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கான பாடல்களுக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

**

மேலும் படிக்க

**

**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**

**[டிஜிட்டல் திண்ணை: விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல்- ஓ.பன்னீர் சூசகம்](https://minnambalam.com/k/2019/06/12/74)**

**[பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்](https://minnambalam.com/k/2019/06/12/20)**

**[சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/06/12/25)**

**[வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு](https://minnambalam.com/k/2019/06/12/22)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share