தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மோடி அரசு ஆட்சிப் பொறுப்பேற்கவுள்ளதால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாயிகளுக்கு நிதியுதவி, சாலை, ரயில்வே உள்ளிட்ட உள்கட்டுமான வசதிகளை மேம்படுத்துவது போன்ற திட்டங்களுக்காக ரூ.100 லட்சம் கோடி வரையில் செலவிடப்படும் என்று நரேந்திர மோடி தேர்தலுக்கு முன்பாக வாக்களித்திருந்தார். தேர்தல் வாக்குறுதியில் இந்தியப் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. பாரதிய ஜனதா கட்சி இத்தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்கும் நிலையில், அதன் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு, நடுத்தர மக்களுக்கான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டால் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக தனது தேர்தல் வாக்குறுதியில் இந்தியாவின் உள்கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதற்காக 2024ஆம் ஆண்டுக்குள் ரூ.100 லட்சம் கோடி வரையில் செலவிடுவதாகத் தெரிவித்திருந்தது. இது மிகப் பெரிய அளவாகும். ஏனெனில், 2019ஆம் நிதியாண்டில் சாலை, ரயில்வே உள்ளிட்ட உள்கட்டுமானத் திட்டங்களுக்காக ரூ.1.2 லட்சம் கோடி மட்டுமே செலவிடப்பட்டிருந்தது. அரசின் செலவுகள் அதிகமாக இருக்கும் நிலையில், பாஜக வாக்குறுதி வழங்கிய தொகையை நிதிப்பற்றாக்குறை இல்லாமல் செலவிடுவது மோடி அரசுக்குச் சற்று சவாலாகவே இருக்கும்.
.
.
**
மேலும் படிக்க
**
.
. **
[ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!](https://minnambalam.com/k/2019/05/24/9)
**
.
**
[திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!](https://minnambalam.com/k/2019/05/24/30)
**
.
**
[அமேதியில் ராகுல் வீழ்ந்த பின்னணி!](https://minnambalam.com/k/2019/05/24/33)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க திமுக வியூகம்!](https://minnambalam.com/k/2019/05/23/167)
**
.
**
[மோடிகளை உருவாக்கும் மோடி](https://minnambalam.com/k/2019/04/11/19)
**
.
.
�,”