Vமெர்சல்: உலக ரசிகர்களைக் கவரும்!

Published On:

| By Balaji

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி வெற்றிகரமான நடிகர்களாக வலம்வருபவர்களில் ஒருவர் எஸ்.ஜே.சூர்யா. விஜய் நடிப்பில் வெளிவரவுள்ள ‘மெர்சல்’, செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என அடுத்தடுத்து முக்கியமான படங்கள் வெளிவரவுள்ள நிலையில், சிறந்த இயக்குநர்களின் படத்தில் நடிப்பது தனது நடிப்பின் வளர்ச்சியை காட்டுவதாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

மெர்சல் படம் குறித்தும் தனது நடிப்பு பயணம் குறித்தும் Behindwoods-க்கு அவர் அளித்த பேட்டியில், “உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களை கவரும் அத்தனை அம்சங்களும் மெர்சல் திரைப்படத்தில் உள்ளது. அதற்கு மேல் என்னால் இப்போது கூற முடியாது. விஜய் சார் அமைதியாக இருப்பார். கேமரா முன்னால் வந்தவுடன் சைக்ளோனாக மாறிவிடுவார். அட்லீ சார் வியக்கவைக்கும் திறமையுள்ளவர். தொடர்ந்து சிறந்த இயக்குநர்களின் படங்களில் ஒப்பந்தமாவது மகிழ்ச்சியளிக்கிறது.

மெர்சலை சேர்த்து இந்த ஜூன் மாதத்திலிருந்து டிசம்பர் வரை நான்கு படங்களில் நடித்துள்ளேன். ஒரு நடிகராக இயக்குநரிடம் நான் முற்றிலும் சரணடைந்து விடுவேன். அவர்கள் வழிகாட்டுதலில் எனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிக்க முயற்சி செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share