vமாவட்டம் தோறும் சைபர் கிரைம் தடுப்பு மையம் !

public

நிதி மோசடிகள், இனவாத மற்றும் ஆபாச படங்களை பரப்புதல் போன்ற இணைய குற்றங்களை தடுக்க, மத்திய உள்துறை அமைச்சகம், ஒரு தலைமை ஒருங்கிணைப்பு மையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. அதாவது மாவட்டம் தோறும் சைபர் கிரைம் தடுப்பு மையம் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினருக்கு சைபர் குற்றங்களில் தடயவியல் ஆய்வு குறித்து பயிற்சி அளிக்க ரூ.83 கோடியை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் கிரைம் தடுப்புத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

மேலும் மாவட்டம் தோறும் சைபர் கிரைம் தடுப்பு மையத்தை அமைத்து இணையத்தில் நடைபெறும் குற்றங்களை கண்காணிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

“இந்திய சட்டம், குழந்தைகளின் ஆபாச காட்சிகள் இடம் பெரும் வலைத்தளங்கள் ஆகியவற்றை முடக்க வேண்டும். 2014-16 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 1,44,496 சைபர் தாக்குதல்கள் நடந்துள்ளன. இதைத்தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக “ உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் 5,693, 9,622 மற்றும் 11,592 சைபர் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. இவை 2013 முதல் 2014 ஆம் ஆண்டு வரையில் 69 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், 2014 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையில் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தேசிய குற்றப்பதிவு பணியகம் தெரிவித்துள்ளது.

அரசு இணையதளங்கள் முடக்கம், நிதி மோசடி, ஆன்லைன் ஸ்டாக்கிங் மற்றும் கொடுமைப்படுத்துதல், தரவு திருட்டு ஆகியவை அதிகளவு நடப்பதாக கூறப்படுகிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0