Vமாஃபியா: ரெடியாகும் அருண் விஜய்!

Published On:

| By Balaji

பாக்ஸர் படத்திற்காக வியட்நாமில் தீவிரமாக பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த அருண் விஜய் தற்போது மாஃபியா படத்திற்கும் ரெடியாகிவிட்டார்.

அருண் விஜய் இயக்குநர் கார்த்திக் நரேனுடம் இணைந்திருக்கும் புதிய படம் மாஃபியா. துருவங்கள் பதினாறு படத்திற்கு பின் கார்த்திக் நரேன் அரவிந்த் சாமியை வைத்து இயக்கியுள்ள நரகாசுரன் படம் சில காரணங்களால் வெளியாகாமல் முடங்கியுள்ளது. இந்நிலையில் இவர் தன் மூன்றாவது படத்தில் அருண் விஜய்யுடன் இணைந்திருக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். வில்லனாக பிரசன்னா நடிக்கிறார். லைகா புரொடக்சன் இப்படத்தை தயாரிக்கிறது.

தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, கேங்க்ஸ்டர் பாணியில் உருவாகும் இப்படத்திற்காக அருண் விஜய்யின் தோற்றத்தை மிகவும் ஸ்டைலாகவும், வித்தியாசமாகவும் படக்குழு வடிவமைத்துள்ளதாம். இது வரையில் அருண் விஜய் இப்படி ஒரு தோற்றத்தில் நடித்ததில்லை என்று கூறுகிறது படக்குழு. இந்த தோற்றத்தில் கடந்த 3 ஆம் தேதி அன்று சென்னையிலுள்ள ஒரு ஸ்டுடியோவில் அருண் விஜய்யை கொண்டு போட்டோ ஷூட்டை படக்குழு நடத்தியுள்ளது. எனவே விரைவில் அருண் விஜய்யின் புதிய தோற்றத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே அருண் விஜய் கௌதம் மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தால் படத்தில் விக்டர் என்ற கதாபாத்திரத்தில் கேங்ஸ்டராக நடித்திருந்தார். அந்தக் கதாபாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது. தற்போது மாஃபியா படத்திலும் கேங்ஸ்டராக நடிப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

**

மேலும் படிக்க

**

**

[திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!](https://minnambalam.com/k/2019/06/07/70)

**

**

[திமுக எம்பிக்கள் ஜாதகம்: அமித் ஷா உத்தரவு!](https://minnambalam.com/k/2019/06/08/23)

**

**

[வாட்ஸ் அப்பில் கேள்வி: ஆள்வைத்து அடித்த அமமுக மா.செ!](https://minnambalam.com/k/2019/06/08/15)

**

**

[டிஜிட்டல் திண்ணை: தமிழர்களைக் கவர குவியும் சாமியார்கள்!](https://minnambalam.com/k/2019/06/07/83)

**

**

[ராஜ்நாத் சிங் – அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி](https://minnambalam.com/k/2019/06/07/31)

**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share