விஜய் மல்லையாமீது அந்நியச் செலாவணி மோசடி மற்றும் வங்கிகளிடம் பெற்ற ரூ.9 ஆயிரம் கோடி கடனை திருப்பிச்செலுத்தாத பணமோசடி வழக்குகள் அமலாக்கத்துறையால் பதிவுசெய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை இதுவரை, இருமுறை மல்லையாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், வங்கிகளின் கடனைத் திருப்பிச்செலுத்த முயற்சிப்பதாகவும், மேலும் ஒருமாத காலம் அவகாசம் தரும்படியும் மல்லையா கேட்டுக்கொண்டார். இந்நிலையில், விசாரணை நடக்கும் தேதியை ஒரு மாதத்துக்கு ஒத்திவைக்க முடியாது எனவும், ஏப்ரல் 9ம் தேதிக்குள் மல்லையா நேரில் ஆஜராகவேண்டும் என்றும் அமலாக்கத்துறை மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. இந்தமுறை மல்லையா நேரில் ஆஜராகாவிட்டால், ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.�,
Vமல்லையாவுக்கு மூன்றாவது சம்மன்
+1
+1
+1
+1
+1
+1
+1