‘பெண் கல்வி மையங்களுக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்துவதாக எந்தத் திட்டமும் இல்லை’ என்று யூ.ஜி.சி. (பல்கலைக்கழக மானிய ஆணையம்) தெரிவித்துள்ளது.
மார்ச் மாதம் வெளியிடப்பட்ட யூ.ஜி.சி-யின் அறிவிப்பில், கல்வி மையங்களுக்கு வழங்கப்படும் நிதி மற்றும் திட்டங்கள் குறித்து கமிஷன் ஆலோசனை நடத்திய பிறகு முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்பிறகு, பெண் கல்வி மையங்களுக்கு வழங்கப்படும் நிதி நிறுத்தப்பட்டால், 167 பெண் கல்வி மையங்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று இந்திய பெண் கல்வி சங்கம் கவலை தெரிவித்தது.
இந்த நிலையில், யூ.ஜி.சி-யின் செயலாளரான பி.கே. தாகூர், “யூ.ஜி.சி-யால் பெண் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நிதியைக் குறைக்கவோ, நிறுத்தவோ எந்தத் திட்டமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
கல்வி நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதும், உயர்கல்வி நிறுவனங்களின் தர நிலைகளை உறுதிசெய்வதும் யூ.ஜி.சி-யின் இரு முக்கியப் பொறுப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.
�,