Vபிளாஸ்டிக் தடை: அரசாணை வெளியீடு!

Published On:

| By Balaji

தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என முதல்வர் சட்டசபையில் அறிவித்திருந்த நிலையில், அதற்கான அரசாணை இன்று (ஜூலை 6) வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், வருகின்ற ஜனவரி 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் ஜூன் 5ஆம் தேதி அறிவித்திருந்தார். இந்நிலையில் அதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அரசாணையில், அரசின் வனத் துறை, தோட்டத் துறை போன்றவற்றில் மரம் வளர்ப்பதற்கும், பால், மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பேக் செய்வதற்கு பிளாஸ்டிக் பயன்படுத்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இருந்து தயாரித்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கும், தொழிற்சாலைகளில் பேக் செய்வதற்காக பயன்படும் பிளாஸ்டிக் மற்றும் மக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட நபரோ, தொழிற்சாலையோ ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்யக் கூடாது என்றும், வணிகர்கள் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel