vபாதுகாப்பு அதிகாரிகளால் ஆபத்து: கெஜ்ரிவால்

Published On:

| By Balaji

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை கொன்றதுபோலவே தன்னையும் கொன்றுவிடுவார்கள் என்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தின் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது. இதையொட்டி அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாபில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது உள்ளூர் தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு கெஜ்ரிவால் அளித்த பேட்டியில், “முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டது போலவே எனது பாதுகாப்பு அதிகாரியை வைத்தே பாஜக என்னை கொலை செய்துவிடும். எனது பாதுகாப்பு அதிகாரிகள் பாஜகவுக்கு தகவல் அளிக்கின்றனர்.

பாஜக எனது உயிரை குறிவைத்துள்ளது. நிச்சயமாக ஒருநாள் என்னை கொன்றுவிடுவார்கள்” என்று தெரிவித்துள்ளார். கெஜ்ரிவாலின் கருத்து குறித்து டெல்லி காவல்துறை உயரதிகாரி ஒருவர் *ஏஎன்ஐ* நிறுவனத்திடம் பேசுகையில், “முதலமைச்சரின் பாதுகாப்புக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ள எங்களது பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களது கடமைக்காக அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து வருகின்றனர். அனைத்து அரசியல் கட்சிகளின் முக்கிய உயர் பொறுப்பாளர்களுக்கும் இதே பிரிவு பாதுகாப்பளித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மே 11ஆம் தேதியன்று டெல்லி மோத்தி நகர் பகுதியில் நடைபெற்ற பேரணியில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார். அப்போது, திடீரென கூட்டத்திலிருந்து எழுந்த ஒரு நபர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முகத்தில் அறைந்தார். இது பாஜகவின் தூண்டுதலல் நடத்தப்பட்ட தாக்குதல் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியது. எனினும், கெஜ்ரிவாலை அறைந்த நபர் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அதிருப்தியாளர் என்று டெல்லி காவல்துறை தெரிவித்தது.

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[விமர்சனம்: மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/7)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/84)

**

.

**

[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)

**

.

**

[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)

**

.

**

[மோடி காய்ச்சல்: சந்திரபாபு நாயுடு பரபரப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/52)

**

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share