நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கட்டுமானப் பணிகளை நிறைவேற்ற மாநில அரசிடம் நிதி கோரியுள்ளது சென்னை பல்கலைக்கழகம்.
தமிழகத்தின் புகழ்வாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான சென்னைப் பல்கலைக்கழகம் சேப்பாக்கம், மெரினா, தரமணி, கிண்டி ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. இப்பல்கலைக்கழகத்தின் கீழ் பல உறுப்புக் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. பல்கலைக்கழக கிளைகளில் ஒன்றான தரமணி வளாகத்தில் உள்ள கட்டடங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும், அதனால் புதிய கட்டடங்கள் கட்டி முடிக்க தமிழக அரசு நிதி வழங்க வேண்டும் எனவும் சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் துரைசாமி தெரிவித்தார். இது பற்றி, இன்று தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
”பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடம், விடுதி மற்றும் வகுப்பறைகள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளுக்கு 15 முதல் 16 கோடி ரூபாய் வரை பல்கலைக்கழகம் சார்பில் செலவழிக்கப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறையால் இந்த கட்டுமானப் பணியை பாதியில் நிறுத்திவைத்துள்ளோம். இந்த பணியை முடிக்க 20 முதல் 25 கோடி ரூபாய் வரை தேவைப்படுகிறது. இந்த நிதியை வழங்குமாறு மாநில அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளோம். விரைவில் நிதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்று துரைசாமி கூறினார்.
2014ஆம் ஆண்டு, தரமணி வளாகத்தில் நடைபெற்ற கட்டட வேலைகள் நிதிப் பற்றாக்குறையால் நிறுத்தப்பட்டன. “பழைய கட்டடங்களில் மழை நீர் வழிந்து, அவை மிகவும் மோசமான நிலையில் உள்ளன. பேராசிரியர்களால் வகுப்பு எடுக்க முடியவில்லை. இதனால், மாணவ மாணவியரின் கல்வித் தரம் பாதிப்படைகிறது. புதிய கட்டடங்கள் கட்டப்பட்டால், பல்வேறு துறைகள் அங்கு மாற்றப்படும்” என்று சென்னை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
அது மட்டுமல்லாமல், கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துவிட்டால் புதிய கட்டடத்திற்குச் சில துறைகளை மாற்றுவோம் என்றும், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
நிதிப் பற்றாக்குறையால், கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த கட்டுமான வேலைகளிலும் சென்னை பல்கலைக்கழகம் ஈடுபடவில்லை. .
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)
**
.
**
[வாக்குக் கணிப்பும் மக்கள் முடிவும்: தேர்தல் வரலாறு சொல்வது என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/18)
**
.
**
[தமிழகம்: திமுக கூட்டணிக்கே சாதகம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/20)
**
.
**
[அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/37)
**
.
**
[ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/38)
**
.
.�,”