vதிமுக நிர்வாகி மீதான வழக்கு: இடைக்காலத் தடை!

Published On:

| By Balaji



முன்னாள் தேமுதிக சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய திமுக நிர்வாகியுமான சந்திரகுமார் மீதான அவதூறு வழக்கைச் சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

திருப்பூர் மாவட்டத்தில் 2013ஆம் ஆண்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்தும், அம்மா உணவகம் குறித்தும் அவதூறாகப் பேசியதாக, சந்திரகுமார் மீது திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் அப்போதைய முதல்வர் தரப்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த அவதூறு வழக்கு, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சந்திரகுமார் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ” தற்போது சட்டமன்ற உறுப்பினராக இல்லாத நிலையில் தன் மீதான அவதூறு வழக்கைச் சிறப்பு நீதிமன்றத்திற்கு விசாரிக்க அதிகாரம் இல்லை” எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை, இன்று (நவம்பர் 21) விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், முன்னாள் எம்.எல்.ஏ சந்திரகுமார் மீதான அவதூறு வழக்கைச் சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share