தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 10 கிராம் தங்கத்தின் சந்தை விலை ரூ.35,409 ஆக உயர்ந்துள்ளது.
சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ளதால் இந்தியாவில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் ஒரு கிராம் தூய தங்கத்தின் (24 கேரட்) விலை ரூ.3,526 ஆக உள்ளது. நேற்றைய தினத்தில் இதன் விலை ரூ.3,489 ஆக மட்டுமே இருந்தது. அதேபோல, 8 கிராம் தூய தங்கத்தின் விலை ரூ.27,912லிருந்து ரூ.28,208 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.3,369 ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.26,952 ஆகவும் உயர்ந்துள்ளது.
சென்னையில் வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.43.80லிருந்து ரூ.44.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.43,800லிருந்து ரூ.44,500 ஆகவும் உயர்ந்துள்ளது. 2019-20 மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாக மத்திய அரசு உயர்த்துவதாக அறிவித்தது. அதன் பின்னர் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை டெல்லியில் ரூ.3,313 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.3,313 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.3,335 ஆகவும், பெங்களூருவில் ரூ.3,275 ஆகவும் உள்ளது.
சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை 1,450 டாலராக உயர்ந்துள்ளது. 2013 மே மாதத்துக்குப் பிறகு இது மிகப் பெரிய விலை உயர்வாகும்.
**
மேலும் படிக்க
**
**[‘காம்ரேட்’டாக மாறிய விஜய் சேதுபதி](https://minnambalam.com/k/2019/07/19/26)**
**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**
**[டிஜிட்டல் திண்ணை: ரஜினி Vs ஸ்டாலின் -ஜோதிடர் மூட்டிய கலகம்!](https://minnambalam.com/k/2019/07/18/82)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**
�,”