vடிஎன்பிஎஸ்சி குரூப் 1 மெயின் தேர்வுக்கு தடை!

Published On:

| By Balaji

கடந்த மார்ச் மாதம் நடந்த குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என்று டிஎன்பிஎஸ்சி ஒப்புக்கொண்டதையடுத்து, அடுத்த மாதம் நடைபெறவிருந்த முதனிலைத் தேர்வுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 1 தேர்வை, கடந்த மார்ச் மாதம் 1 லட்சத்து 68 ஆயிரம் பேர் எழுதினர். இதன் முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியானது. ஆனால், 200 கேள்விகளில் சில கேள்விகள் தவறானவை என்று புகார்கள் எழுந்தன. இதையடுத்து, தவறாக உள்ள 18 விடைகளை மறுமதிப்பீடு செய்யாமல் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என்று சென்னையைச் சேர்ந்த விக்னேஷ் உள்ளிட்ட சில தேர்வர்கள் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். ஆனாலும், முதனிலைத் தேர்வுக்குத் தேர்வானவர்களின் பட்டியலை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி.

இந்த வழக்கு விசாரணை இன்று (ஜூன் 13) நீதிபதி பார்த்திபன் அமர்வு முன்பாக நடைபெற்றது. அப்போது, மொத்தமுள்ள 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என்று டிஎன்பிஎஸ்சி தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது. இது தொடர்பாகப் பதில் மனுதாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்குக் கண்டனம் தெரிவித்த நீதிபதி, குரூப்1 தேர்வு முடிவுகளில் இது போன்ற குளறுபடிகளை அனுமதிக்க முடியாது என்றார். போட்டித் தேர்வுகளில் தவறான கேள்விகள் கேட்கப்படுவதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும், தவறாகக் கேள்விகள் கேட்கப்பட்டது குறித்து வரும் ஜூன் 17ஆம் தேதியன்று டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டார் நீதிபதி பார்த்திபன்.

வரும் ஜூலை 12ஆம் தேதியன்று குரூப் 1 முதனிலைத் தேர்வுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார் நீதிபதி.

**

மேலும் படிக்க

**

**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**

**[டிஜிட்டல் திண்ணை: விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல்- ஓ.பன்னீர் சூசகம்](https://minnambalam.com/k/2019/06/12/74)**

**[பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்](https://minnambalam.com/k/2019/06/12/20)**

**[சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/06/12/25)**

**[வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு](https://minnambalam.com/k/2019/06/12/22)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share