vஜி.வி.பிரகாஷ்: குப்பத்துக்கு ராஜாவாக போட்டி!

Published On:

| By Balaji

ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் குப்பத்து ராஜா படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்குநராக அறிமுகமாகும் படம் குப்பத்து ராஜா. இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக பாலக் லால்வானி நடிக்கிறார். பார்த்திபன், யோகிபாபு, பூனம் பஜ்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏற்கெனவே வெளியான ட்ரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது படத்தின் இரு நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதில் ஜி.வி.பிரகாஷ் பார்த்திபனை மறைமுகமாக சண்டைக்கு இழுக்கும் விதமாக காட்சிகள் அமைந்துள்ளன. ஜி.வி.பிரகாஷின் நண்பனாக யோகிபாபு காமெடி செய்கிறார்.

படம் குறித்து இயக்குநர் பாபா பாஸ்கர், நம்மை சுற்றியுள்ள மக்கள், கிராமங்கள் மற்றும் அண்டை மாநிலங்களின் நேட்டிவிட்டியை பார்த்து வியக்கிறார்கள். சேரிகள் என்பவை உண்மையில் சென்னை மாநகரத்தின் இயற்கையான கூறுகள் தான். குப்பத்துக்கு ராஜாவாக விரும்பும் இருவருக்கு இடையில் நடக்கும் மோதல் தான் படம். பார்த்திபன் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க, அவரை எதிர்த்து ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார்” என்று கூறியுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார், பிரவீன் கே.எல். படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். எஸ் ஃபோகஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை ஏப்ரல் 5ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share