Vசிக்ஸருக்காக பாடிய சிவகார்த்தி

Published On:

| By Balaji

வைபவ் நடிக்கும் சிக்ஸர் படத்திற்காக சிவகார்த்திகேயன் பாடிய பாடல் வெளியாகியுள்ளது.

மேயாத மான் படத்தை தொடர்ந்து வைபவ் நடிக்கும் படம் சிக்ஸர். பல்லக் லல்வானி, சதிஷ், ராமர், ராதாரவி, ஸ்ரீரஞ்சனி நடித்துள்ள இப்படத்தை சாச்சி எழுதி இயக்கியுள்ளார். ரொமாண்டிக் காமெடியாக உருவாகியுள்ள இப்படத்தில் சின்னதம்பி படத்தில் வரும் கவுண்டமணி போல வைபவுக்கும் மாலை கண் நோய் உள்ளதாக இவரது பாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார்கள். மே மாதம் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தின் பாடலை சிவகார்த்திகேயன் பாடியுள்ளார். *எங்கவேணா கூட்டிட்டு போ* என தொடங்கும் இப்படத்தின் பாடல் இணையத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. லோகன் எழுதியுள்ள பாடல் வரிகளும் டிரெண்டிங்கான இசையும் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது.

சிவகார்த்திகேயன் இதற்கு முன் தனது படங்களில் பாடியிருந்தாலும், மற்ற நடிகர்களுக்காகவும் அவர்களது படங்களில் பாடி வருகிறார். மாப்ள சிங்கம், தும்பா படங்களை தொடர்ந்து தற்போது சிக்ஸரிலும் பாடியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கணா படத்தில் இவரது மகளுடன் பாடிய வாயாடி பெத்த புள்ள பாடல் வைரல் ஹிட்டானது.

சிக்ஸர் படத்தில் பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். வால்மேட் என்டெர்டெயின்மென்ட் மற்றும் ட்ரைடண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. மேலும் சிக்ஸர் படத்தின் டீசரையும் சிவகார்த்திகேயனே வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

[சிக்ஸர் பாடல்](https://www.youtube.com/watch?v=7OPN7122LaU&feature=youtu.be)

**

மேலும் படிக்க

**

**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**

**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**

**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் மீண்டும் முயற்சி!](https://minnambalam.com/k/2019/07/12/87)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share