சரண் இயக்கத்தில் ஆரவ் கதாநாயகனாக நடிக்கும் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
அஜித் நடிப்பில் உருவான காதல் மன்னன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி அமர்க்களம், அட்டகாசம், வசூல்ராஜா எம்பிபிஎஸ் என பல ஹிட் படங்களைக் கொடுத்தவர் சரண். தற்போது இவர் இயக்கும் படம் மார்கெட் ராஜா எம்பிபிஎஸ். ஆரவ், காவ்யா தாப்பர் இணைந்து நடிக்கின்றனர். ராதிகா முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நாசர், நிகிஷா பட்டேல், யோகி பாபு, ரோஹிணி, சாயாஜி சிண்டே ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
மே மாதம் வெளியான இப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து இப்படத்தின் டீசர் நேற்று(ஜூலை 12)வெளியாகியுள்ளது.
ஆரவ் மார்கெட்டில் ரவுடியாகவும், கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவராகவும் இப்படத்தில் நடித்துள்ளார். ஆக்ஷன், காதல், ஹாரர் என பலவிதமான ஜானர்களில் இப்படம் இருக்குமென தெரிகிறது.
சிறு பட்ஜெட் வசூல்ராஜா எம்பிபிஎஸ் போலயிருக்கும் இதன் டிரெய்லரைப் பார்க்கும் போது, இயக்குநர் சரண் தன் வெற்றி பெற்ற படத்தின் ஃபார்முலாவை இப்படத்தில் பின்பற்றியுள்ளார் எனத் தோன்றுகிறது. சைமன் கே கிங் இசையமைத்துள்ளார். சுரபி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
[மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் டீசர்](https://www.youtube.com/watch?v=BeAuf015Csk&t=31s)
**
மேலும் படிக்க
**
**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**
**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் மீண்டும் முயற்சி!](https://minnambalam.com/k/2019/07/12/87)**
**[நாங்கள் 150 பேர் எழுந்து நின்றால்: ஜெகன் ஆவேசம்!](https://minnambalam.com/k/2019/07/12/48)**
**[ஏ.எல்.விஜய் திருமணக் கொண்டாட்டம்!!](https://minnambalam.com/k/2019/07/12/19)**
**[நீதிமன்றத்திற்கு சவாலா? தலைமை நீதிபதி கேள்வி!](https://minnambalam.com/k/2019/07/12/57)**
�,”