கோல்டு வின்னர் எண்ணெய் நிறுவனத்தின் முத்திரையைப் பயன்படுத்த, 8 நிறுவனங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
காளீஸ்வரி ரிஃபைனரி பிரைவேட் லிமிடெட் சார்பாக, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சூரியகாந்தி எண்ணெய், கடலை எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு எண்ணெய்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கோல்டு வின்னர் என்ற பெயரில், இந்த எண்ணெய் விற்பனை நடைபெறுகிறது. இந்த பெயர் மற்றும் முத்திரையைத் தவறாகப் பயன்படுத்தி வேறு சில நிறுவனங்கள் எண்ணெய் விற்பனையில் ஈடுபடுவதாகப் புகார் எழுந்தது.
“எங்கள் நிறுவனத்தின் முத்திரையை மற்ற நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தி, அவர்களது பொருட்களை சந்தைப்படுத்துகின்றன. மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதோடு, எங்களது நிறுவனத்தின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துகின்றன. அதனால், அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று காளீஸ்வரி நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இன்று (மே 21) இந்த வழக்கு விசாரணை நீதிபதி வைத்தியநாதன் அமர்வு முன்பாக நடைபெற்றது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரானார் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன். காளீஸ்வரி நிறுவனத்தின் முத்திரையை முறைகேடாகப் பயன்படுத்திய நிறுவனங்களின் பட்டியலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
விசாரணையின் முடிவில், திண்டுக்கல்லைச் சேர்ந்த ஸ்ரீராம் டிரேடர்ஸ், தேனியைச் சேர்ந்த ஆர்.ஜி. ஏஜென்ஸிஸ் உள்ளிட்ட 8 நிறுவனங்கள் கோல்டு வின்னர் எண்ணெய் நிறுவனத்தின் முத்திரையைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார் நீதிபதி.
.
.
**
மேலும் படிக்க
**
.
. **
[வளர்மதியிடம் சீறிய எடப்பாடி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/27)
**
.
**
[எக்சிட் போல்: பிரபல ஊடகங்களின் சறுக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/56)
**
.
**
[தெற்கில் பாஜகவைப் பின்னுக்குத் தள்ளுமா காங்கிரஸ்?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/32)
**
.
**
[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு அமித் ஷா தூது!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/82)
**
.
.
�,”