தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பரவூர் கோவில் திருவிழாவில் நடந்த பட்டாசு தீ விபத்தில் 100–க்கும் மேற்பட்டோர் இறந்த தகவல் அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி, மருந்துகள் மற்றும் மருத்துவ பணியாளர்களை அனுப்ப தமிழக அரசு தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல், இதுகுறித்து, கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில், தீ விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த துயரமும் அடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தோர் விரைந்து குணமாக வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்வதாக ஆளுநர் கே.ரோசய்யா குறிப்பிட்டுள்ளார்.�,