Vகிச்சன் கீர்த்தனா: பாதாம் அல்வா!

Published On:

| By Balaji

இன்று கிருஷ்ண ஜெயந்தி. கிருஷ்ண ஜெயந்தி என்றாலே பெரும்பாலான வீடுகளில் வெண்ணெய், நெய், திரட்டுப்பால், சீடை, முறுக்கு, அதிரசம், லட்டு, பாதாம் அல்வா போன்றவை செய்யப்படுவது உண்டு. இதில் பாதாம் அல்வாவை எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பாதாம் பருப்பு – 1 கப்

பால் – 1 கப்

சர்க்கரை – 1 கப்

நெய் – கால் கப்

ஏலக்காய்த்தூள் – 3

குங்குமப்பூ – சிறிது (பாலில் ஊறவைத்தது)

செய்முறை

முதலில் பாதாம் பருப்பை வெந்நீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர், அதன் தோலை நீக்கிவிட்டு மிக்ஸியில் போட்டு ரவை ரவையாக அரைத்துக் கொள்ளவும். அதன்பின், அடிகனமான ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அரைத்த விழுதையும், சர்க்கரையையும் போட்டு மிதமான தீயில் கிளறவும்.

சர்க்கரை கரையும்போது நீர்த்துப் போகும் அல்வா, பின்னர் சிறிது நேரத்தில் கெட்டியாக பாத்திரத்தில் ஒட்டாமல் வரும். அந்தப் பதத்தில் வாணலியை இறக்கி, அதில் நெய், குங்குமப் பூ, ஏலக்காய் தூள் சேர்த்துக் கிளறவும். சிறிது நெய் தடவிய கிண்ணத்தில் அல்வாவைக் கொட்டி அலங்கரிக்கவும். இது வெண்மையான நிறத்தில் இருக்கும்.

வேண்டுமானால் இதனுடன் கேசரிப் பவுடர் சேர்த்து நிறமூட்டிக் கொள்ளலாம் அல்லது பிடித்த எசென்ஸ் சேர்த்து மணமூட்டிக் கொள்ளலாம். அவ்வளவுதான் சூடான பாதாம் அல்வா ரெடி!

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share