vஎம்.எல்.ஏ.க்களுக்கு சென்னையில் வீடு: பன்னீர்

Published On:

| By Balaji

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சென்னையில் அரசு சார்பாக வீடு கட்டித் தரப்படும் என்று சட்டமன்றத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற மானியக் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று (ஜூலை 20) பொதுப்பணி, கூட்டுறவு, செய்தித் தொடர்பு, தமிழ் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான முக்கிய அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அப்போது பேசிய முதல்வர், “சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி தற்போது ரூ. 2.50 கோடியாக இருக்கிறது. இதனை ரூ.3 கோடியாக உயர்த்த வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இதனை பரிசீலித்து சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நிதித் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கைகள் மீது பதிலுரை வழங்கிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், “அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம் ரூ.5000லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். ஓய்வூதியதாரர்களுக்கு தற்போது வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம் ரூ.2000 லிருந்து ரூ.4000 ஆக உயர்த்தி வழங்கப்படும்” என்று அறிவிப்பு வெளியிட்டார்.

மேலும், மும்பையில் தமிழ்நாடு இல்லம் அமைக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், “தமிழக வீட்டுவசதி வாரியத்தின் மூலமாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சென்னையில் வீடு கட்டித் தரப்படும். இதற்கான பணத்தை அவர்கள் தவணை முறையில் செலுத்திக்கொள்ளலாம். சென்னை நந்தனம் மற்றும் கே.கே. நகரில் 318 அடுக்கு மாடி வீடுகள் கட்டப்படும்” என்றும் தெரிவித்தார். பதிலுரை முடிந்ததைத் தொடர்ந்து அவையை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையிலுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர்.

**

மேலும் படிக்க

**

**[ தமிழ் பேசினால் தமிழ்ப் படமா?](https://minnambalam.com/k/2019/07/20/20)**

**[டிஜிட்டல் திண்ணை: சசிகலா நடத்திய மெகா குடும்ப பஞ்சாயத்து!](https://minnambalam.com/k/2019/07/19/85)**

**[ஆகஸ்டில் இங்கிலாந்து பறக்கும் தனுஷ்](https://minnambalam.com/k/2019/07/20/17)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share