சத்தியாகிரகம் அறவழிப் போராட்டத்தை அனைவருக்குமே கற்றுத் தந்த மகாத்மா காந்திக்கு அமெரிக்காவின் உயர்ந்த குடிமகன் விருது வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இந்திய சுதந்திர தினம் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இதற்காக பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதில் ஒன்றான அணிவகுப்பு நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்காவின் எம்.பி கரோலின் பி மலோனி கூறியதாவது:
மகாத்மா காந்தி கையில் எடுத்த சத்யாகிரகம் என்னும் ஆயுதம் எவ்வளவு வலிமையானது. சத்யாகிரகம் மற்றும் அறவழிப் போராட்ட முறைகளை இந்த உலகமே வரவேற்றது மட்டுமல்லாமல் ஏற்றுக்கொண்டது.
அவரது போராட்ட முயற்சி உலகிற்கே கற்றுகொடுத்த சத்யாகிரகம் அறவழிப் போராட்டதுக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்க வேண்டும். அவர் இறந்துவிட்ட பிறகும், அமெரிக்காவின் உயரிய விருதான உயர்ந்த குடிமகன் என்ற விருதை அவருக்கு வழங்கி கவுரவிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளேன்.
வெளிநாட்டைச் சேர்ந்தவருக்கு இந்த விருதை வழங்குவதில் சட்டச் சிக்கல் இருப்பதால், அதற்கான சட்டம் இயற்றி, விருதைக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். பிரசூன் சர்மா பேசுகையில், “2018இல் வரவுள்ள காந்தியின் 150ஆம் பிறந்தநாள் விழாவில் இவ்விருது அவருக்கு அறிவிக்கப்படுவது சிறந்த வரலாற்றுச்சிறப்புமிக்க மரியாதையாக இருக்கும். தற்போதைய சூழ்நிலையில் காந்தியின் அகிம்சை, அமைதிக் கொள்கைகள் இவ்வுலகுக்கு மிகவும் தேவை” என்றார்.�,”