vஉடல் பருமனால் பாதிக்கப்படுவோர் அதிகரிப்பு!
உலகம் முழுவதும் உடல் பருமனால் 12 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இன்றையச் சூழலில் சிறியவர்கள், பெரியவர்கள் அனைவரும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னை உடல் பருமன். காரணம், நவீன வாழ்க்கை முறை, மாறிவிட்ட உணவுப் பழக்கம். இந்த நிலையில் உடல் பருமன் தின விழாவையொட்டி (அக் 11) ‘லாண்செட்’ நிறுவனம் உலகம் முழுவதும் நடத்திய ஆய்வில் சுமார் 12.4 கோடி பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து 200 நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள், இளைஞர்கள், ஆகியோரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் ஐரோப்பிய நாடுகளில் இங்கிலாந்தில் அதிகளவு உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், சீனா, இந்தியா உள்ளிட்ட கிழக்கு ஆசிய நாடுகளில் உடல் பருமனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ஃபாஸ்ட் ஃபுட் மற்றும் கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதால் இது போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. அதன்படி 5-10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அதிகளவு சிரமப்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 40 ஆண்டுகளில் தற்போது உடல் பருமனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 10 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலை நீடித்தால் உடல்நலக் கோளாறுகளும் அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.�,